Tuesday, April 30, 2013

தல அஜீத் வரலாறு – 16

 






2000ம் வருஷம் வரைக்கும் தலயோட வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை தல யோட பேட்டி மூலமாகவே பாத்தாச்சு, தல நடிச்ச படங்களை பத்தியும் சில முக்கிய நிகழ்வுகளையும் கூட பாத்தாச்சு. இப்ப பாக்க போறது தல யோட மனைவி ஷாலினி அவர்கள் கடைசியாக ஒரு நடிகையாக 2000 வருஷம் மார்ச் மாசம் ஒரு பத்திரிக்கைக்கு கொடுத்த கொடுத்த பேட்டி….

முதலிலேயே ஒன்னு சொல்லிக்கறேன்….திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக நடிக்க மாட்டேன். இது மத்த சில நடிகைகள் சொல்லுவது போல அர்த்தமில்லாத வார்த்தை கிடையாது….கண்டிப்பாக நடிக்க மாட்டேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை என்பது ரொம்ப முக்கியமானதுன்னு நினைக்கிறேன். என்னோட மனம் கவர்ந்தவரோட குடும்பத்தை சரியாக வழி நடத்துவது மட்டுமே என்னோட முழு நேர வேலையாக இருக்கும். அதனால் திருமணத்துக்கு பின்ன நடிப்பீங்களா போன்ற வழக்கமான சந்தேக கேள்விகள் வேண்டாம்.

இனி கேள்வி மற்றும் ஷாலினியின் பதில்கள்,

கேள்வி: அஜீத்தை எங்க? எப்போ? முதல் முதலில் சந்தீத்தீர்கள்?

பதில்: அமர்க்களம் படத்துல நடிக்க வேண்டி இயக்குநர் சரனும் படத்தின் தயாரிப்பாளரும் கேட்டுருந்தாங்க, ஆனால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லியிருந்தேன், அந்த சமயம்……நவம்பர் 1998 ல் ஒருநாள் அஜீத் எனக்கு போன் செஞ்சு அமர்க்களம் தன்னோட 25வது படமுன்னும், அந்த படத்தில் நடிக்குமாறு கேட்டு கொண்டார், மேலும் கதையை கேக்காம உடனே நிராகரிக்க வேண்டாம். முதலில் கதையை கேளுங்க பின்னர் நடிப்பதும் நடிக்காததும் உங்க விருப்பமுன்னு சொல்லியிருந்தார்.

அஜீத் பேசினதுக்கு பின்ன….இயக்குநர் சரன் வந்து சொன்ன கதை எனக்கு பிடிச்சுருந்துது, மேலும் அவரோட காதல் மன்னன் படத்தை குடும்பத்தோடு பார்த்தோம். அந்த படமும் பிடிச்சுருந்துது….அதே டீம் தான் அமர்க்களம் படத்துக்கும்…சோ படத்துல நடிக்க சம்மதம் சொல்லி ஷீட்டிங் போனேன்.,

முதல் காட்சி நடிகர் தாமுடன் நடிச்சுட்டுருக்கும் போது அங்கே அஜீத் வந்துருந்தார்….அதுதான் எங்கள் முதல் சந்திப்பு, அது 17 மார்ச் 1998. அப்போ எங்களுக்குள்ளே எந்த உறவும் இல்லை….ஜஸ்ட் அவர் அந்த படத்தோட ஹீரோ நான் அந்த படத்தோட ஹீரோயின்.

கேள்வி: முதல் முதலில் அஜீத் தனது காதலை உங்களிடம் சொல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பதில்: அஜீத் வந்து முதலில் என்கிட்டே தன் காதலை சொல்லும் போது நான் அவசரப்பட்டு எந்த பதிலும் சொல்ல விரும்பலை ஏன்னா இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்…..முதலில் என் பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னேன்…பின்ன அஜீத் பெற்றோரும் என் பெற்றோரும் கலந்து பேசி எங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிச்சாங்க.

கேள்வி: முதலில் உங்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதே ஏன்?

பதில்: மலையாளத்தில்……இயக்குநர் கமல் இயக்கதில் நிறம் எனும் படத்துல நடிச்சுட்டு இருக்கும் போது கமல் சார் கூட ஒரு ஒப்பந்தம் செஞ்சுருந்தேன், அந்த படம் ஹிட் ஆச்சுன்னா…அதே படத்தை தமிழில் ரீமேக் பன்னும் போதும் ஹீரோயினா நடிச்சு தரனுமுன்னு…அந்த படம் பயங்கர ஹிட்டாச்சு, அதனால ஒப்பந்தபடி தமிழில் நடிக்க வேண்டிய கட்டாயம்..அதுதான் பிரசாந்துடன் நடிக்கும் பிரியாத வரம் வேண்டும்.., அந்த படத்துல நடிச்சுக்கிட்டு இருந்த்தாலத்தான் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டியதாச்சு.

கேள்வி: திருமணத்துக்கு பின்ன உங்கள் படிப்பை தொடர்வீர்களா?

பதில்: நான் காதலுக்கு மரியாதை நடிக்கும் போது பிபிஏ முதல் வருஷம் சேர்ந்து இருந்தேன். இப்போ முதல் வருஷம் முடிக்க போறேன், கல்யானத்துக்கு பின்னவும் படிப்பேன். பிபிஏ முடிச்சுட்டு எம்பிஏ படிக்கனுங்கிரது என்னோட விருப்பம்.

கேள்வி: அஜீத்துக்கு எந்தந்த வழிகளில் உதவ முடிவெடுத்துருக்கீர்கள்?

பதில்: அவரோட கால்ஷீட்டை பாத்துக்க முடியும், அவரோட ரோலுக்கு ஏத்த காஸ்ட்யூம் செலக்ட் பன்னமுடியும். அவருக்காக கதை கேக்க முடியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கம்பெனி கொடுத்து உற்சாகப்படுத்தவும் முடியும். ஏன் அவரோட காருக்கு ட்ரைவராக கூட என்னால இருக்க முடியும். எல்லா வழிகளிலேயும் அவருக்கு கூடவே இருந்து உற்சாகமா பாத்துக்க முடியும்.

கேள்வி: எத்தனை குழந்தைகள் பெற்றுகொள்ள விருப்பம்?

பதில்: அஜீத்துக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம். இப்போதைக்கு எத்தனை குழந்தை வேனுமுன்னுல்லாம் நாங்க முடிவு பன்னலை…பாக்கலாம் சமயம் வரும்போது….

கேள்வி: குடும்பத்தை பாத்துக்க போறதா சொல்லிட்டீங்க….சமையல் பன்ன தெரியுமா?

பதில்: ஓரளவுக்கு தெரியும், இப்போ வீட்டுல ஃப்ரியாக இருப்பதால் சமையல் செய்ய கத்துக்கிட்டும் இருக்கேன். நானும் அஜீத்தும் அசைவம்தான் அதனால எந்த பிரச்சனையும் வராது. எங்க ரெண்டு பேருக்கும் சிக்கன் ரொம்ப பிடிக்கும். ஆனால் எங்க ரெண்டு பேருக்கும் சாக்லேட் சுத்தமா பிடிக்காது. இப்படி நிறைய ஒற்றுமைகள் இருக்கு. மேலும் அஜீத்துக்கு சூப்பரா சமைக்க தெரியும்…. சோ….ஒரு பிரச்சனையும் இல்லை.

கேள்வி: உங்க ஹனிமூன் எங்க?

பதில்: இன்னும் முடிவு பன்னலை.., பேசிக்கிட்டு இருக்கோம்

கேள்வி: உங்க ரெண்டு பேருக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமைகள் என்ன?

பதில்: எங்க ரெண்டு பேருக்கும் உள்ள முதல் ஒற்றுமை எங்கள் மனசும், அந்த மனதில் உள்ள அன்புதான். அதுதான் எங்கள் நட்புக்கும் காரனமாச்சு. இப்பவும் என்னோட நண்பர் யாருன்னு கேட்டா….அது அஜீத் மட்டும்தான். கல்யானத்துக்கு பின்னவும் எங்கள் நட்பு தொடரும். அதுதான் எங்களை புரிஞ்சுக்கவும் உதவும்.

கேள்வி: அஜீத்துக்கிட்ட பிடிச்சது என்ன?

பதில்: மூனு விஷயம்…அதுல முதல் விஷயம் சினிமா சம்பந்தப்பட்டது….அஜீத் ஒரு கடின உழைப்பாளி. சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அஜீத்துக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமே தேவையில்லை.

ரெண்டாவது…அஜீத் முதலில் சிந்திப்பது தன் கூட வேலை செய்யறவங்களைப் பத்திதான், பின்னதான் தன்னைபத்தியே யோசிப்பார். தன் கூட இருக்கும் யாருக்காவது கஷ்டமுன்னா அவங்களுக்கு உதவி செய்யும் முதல் கை அஜீத்தோடதுதான்.

மூனாவது….பல பல கஷ்டங்களுக்கு பிறகும் எந்த வித ஆதரவும் இல்லாமல் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக உயர்ந்த இடத்தில் இருக்க காரனமாகும் அவரோட தன்னம்பிக்கைத்தான்.

கேள்வி: சினிமாவிலிருந்து விடைபெறுவதற்கு முன்னர் உங்கள் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

பதில்: இதுவரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. இப்போ அலைபாயுதே எனும் படத்துல மனிரத்னம் சார் இயக்கத்துல நடிச்சுக்கிட்டு இருக்கேன்…இந்த படம் மூலமா நடிகை ஷாலினி எப்போதும் உங்க மனசுல இருப்பான்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் நன்றி…வணக்கம்.

No comments:

Post a Comment