Saturday, January 19, 2013

பொது அறிவு வினா

* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ

* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி

* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்

* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்

* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை

* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

* தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்

* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்

* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு

* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா

* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.

* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது

* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT

* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்

* ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்

* பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்

* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்

* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்

* விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

* பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை

* குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

* மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்

* வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

Friday, January 18, 2013

எந்த சூலலிலும் கோபம் வேண்டாம்

அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் அப்துல்லாவின் கனவில், ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை....

பக்தி கதைகள்

ஒரு ராஜா கொடுங்கோலாட்சி செய்தான். கண்டபடி வரிவிதித்து கசக்கிப் பிழிந்தான். விரும்பிய பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து வைத்தான். இவன் செத்து தொலைய மாட்டானா என்று மக்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், ஒரு மகான் அவ்வூருக்கு வந்தார். அவரிடம் மக்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னார்கள். மகான் அவர்களிடம்,நான் மன்னனை நேரில் சந்தித்து அவனுக்கு அறிவுரை சொல்கிறேன், நல்லதே நடக்கும், மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லி தேற்றினார்.
அரசவைக்கு சென்ற அவரை மன்னன் எழுந்து நின்று கூட வரவேற்கவில்லை. என்ன சாமியாரே! காடு, கரை என எங்காவது சுற்றினால் என்ன! அரண்மனைக்கு வந்து யாகம் நடத்துகிறேன்...அது...இது என சன்மானம் வாங்க வந்திருக்கிறீரா? என எகத்தாளமாகக் கேட்டான். மகானுக்கு கோபம் வந்துவிட்டது. அட மூடனே! உன் கொடிய ஆட்சியில் மக்கள் படும் பாட்டை எடுத்துரைக்க வந்தால், எடுத்தெறிந்தா பேசுகிறாய்? இன்னும் ஓராண்டில் உனக்கு சாவு நிச்சயம், என்று சாபம் கொடுத்து விட்டு வெளியேறி விட்டார். மக்களுக்கு இந்த செய்தி எட்டியது. மகானின் சாபம் பலித்தே தீரும் என அவர்கள் மகிழ்ந்தனர். துறவிகளின் சாபம் பலிக்குமென்பதால், மன்னனையும் பயம் தொற்றியது. அன்று முதல், தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் வாரிக் கொடுத்தான்.
மக்களின் வரிச்சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவனை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வாழ்த்து அவனுக்கு அரணாக இருந்தது. ஓராண்டும் கழிந்து விட்டது. மகானின் சாபம் பலிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் அங்கு வந்தார். சுவாமி! உங்களிடம் தவறாக நடந்ததற்காக மன்னியுங்கள். உங்கள் சாபம் பலிக்காமல் போனது எப்படி? என்றான் மன்னன். யார் சொன்னது, சாபம் பலிக்கவில்லையென! கெட்டவனான ராஜா இறந்து விட்டான். இப்போது நற்குணமுடைய ராஜாவல்லவா ஆட்சி செய்கிறான்! என்றார். மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.

சிந்திக்க, செயல்பட

ச்சே, ரொம்ப லேட்டாயிடுச்சே, என்று நினைத்துக்கொண்டே, மனம் சோர்ந்து, களைப்புடனும் வீட்டுக்குள் நுழையும்போது, வாசலிலிலேயே எனது ஐந்து வயது மகன் எனக்காகக் காத்திருந்தான்.
"அப்பா, உங்களெ ஒரு கேள்வி கேட்கலாமா?"
"கேளேன், என்ன விசயம்?"
"நீங்க ஒரு மணி நேரத்திலே எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?"
எனக்கு கோபம் வந்துவிட்டது.
"என் சம்பளத்தெப் பத்தி உனக்கென்ன?" "இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விசயம், போய் உன்னுடைய புக்ஸ் எல்லாத்தெ ஒழுங்கா எடுத்து வை."
"தயவு செஞ்சி சொல்லுங்கப்பா, எவ்வளவு அப்பா ஒரு மணி நேரத்துக்கு கிடைக்குது?"
மகனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் கிடைக்குது." என்றேன்
"அப்படியா?"என்றுக் கேட்டவன் தலையைக் குனிந்துக் கொண்டான், பிறகு மெதுவாக தலையை நிமிர்த்தி "அப்பா,எனக்கு ஒரு 300 ரூபா கடன் கொடுக்க முடியுமா?"
எனக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இதுக்கு தான் நீ என்னுடைய சம்பளத்தெப் பத்திக் கேட்டையா?" "அதானேப் பார்த்தேன், அந்த காசிலெ தேவையில்லாத பொம்மெகளெ வாங்கி வீணாக்குறதுதான் உன் வேலெ.போ போய் தூங்கு."
மகன் ஒன்றும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டான்.
நான் சோபாவில் சரிந்தேன், பையன் கேட்டதை நினைக்க நினைக்க என் கோபம் மேலும் அதிகமானது. காசு வேணுங்கறதுக்காக என்னுடைய சம்பளம் எவ்வளவுன்னு கேக்கற அளவுக்கு இந்த பொடியனுக்கு தைரியம் வந்துருச்சே என்று மனம் கருவியது. அப்படியே கொஞ்சம் அசந்துவிட்டேன்.
திடீரென்று முழிப்பு வந்துப் பார்த்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் கழிந்து விட்டிருந்தது. இப்பொழுது மனம் கொஞ்சம் தெளிவானது போல உணர்ந்தேன்.
பையனின் நினைப்பு வந்தது. "பொதுவா இந்த மாதிரி எல்லாம் அவன் பணம் கேட்க மாட்டானே. 300 ரூபாய் கேட்கிறான்னா, ஏதாவது முக்கியமான தேவை இருக்குமோ?" என்று நினைத்து கொண்டே பையனின் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தேன். "கண்ணா தூங்கிட்டெயா?"
"இல்லெப்பா, முழிச்சிட்டுதான் இருக்கேன்!"
"நான் ரொம்பா கோவமா உங்கிட்டெப் பேசிட்டேன்னு நெனைக்கிறேன்" "அது வந்து இன்னிக்கு ரொம்ப வேலை,களைப்பு, அந்த உளைச்சலெ (tension) உங்கிட்டெக் காட்டிட்டேன்". "இந்தா!நீ கேட்ட 300 ரூபா".
பையன் உடனே படுக்கையெ விட்டு குதித்து எழுந்துப் புன்னகையுடன், 'நன்றி அப்பா!'என்று கண்கள் விரிய சொன்னான். பிறகு, படுக்கையின் மேல் பக்கத்திற்குச் சென்று தலையணையின் அடியில் கையைவிட்டு, சில கசங்கிய ரூபாய் நோட்டுக்களை எடுத்தான்.
அதைப் பார்த்த எனக்கு கையில் காசு வைத்துக் கொண்டேக் கேட்கிறானெ என்று மீண்டும் கோபம் வந்துவிட்டது.
அவன், மெதுவாக தன் பணத்தை எண்ணத் தொடங்கினான், பிறகு என்னைப் பார்த்தான்.
உங்கிட்டெத் தானெ இவ்வளவு பணம் வச்சிருக்கே, பின்னெ எதுக்கு மறுபடியும் பணம்" என்று நான் கத்தினேன்.
"ஏன்னா, முதல்லெ எங்கிட்டெ கம்மியா இருந்தது. இப்ப சரியா இருக்குது",
"அப்பா, இப்ப எங்கிட்டெ 500 ரூபா இருக்குது, அதெ நா உங்களுக்கு கொடுக்கறேன்; நீங்க எனக்காக ஒரு ஒரு மணி நேரத்தெ ஒதுக்குங்க;
தயவு செய்து நாளைக்கி கொஞ்சம் சீக்கிரமா வாங்க: நாம இரண்டுப் பேரும் சேர்ந்து சாப்பிடலாம்."

Wednesday, January 9, 2013

GK பொதுஅறிவு

1 வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890

2 உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5

3 ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?

விடை :வித்யா சாகர்.



4 மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

5 சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.

6 சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.

7 யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.


8 கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை..

9 உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .

10 கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .

11 ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.

12 உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.

13உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62

14 காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.

15 லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.

16 மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.

17 சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.

18 மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.

19 ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.

20 உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.

21 நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.

22 இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.

23 ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.

24மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி

25 தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை

26 முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்

27 ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி

28 உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு

29 சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்

30 ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்

31 மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%

32 காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்

33 பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை

34 ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30

35 மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்



36. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
37. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்
38 செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
39. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
40 பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்
41. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்
42. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
43. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்
44. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்
45. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்
46 மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
47 பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்
48. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
49. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
50 களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
51. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை
52. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
53. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
54. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
55. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)

நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே

 

 
பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: “நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!”
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?


சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!