Tuesday, April 30, 2013

தல (அஜீத்) வரலாறு – 15

 





தல நடிச்சு 2000ம் வருஷம் வெளிவந்த படங்கள் மொத்தம் 3 தான். அவை முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உன்னைக் கொடு என்னை தருவேன்.


முகவரி….படம் பத்தி உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ரிலீசானதும் கொஞ்சம் டல்லாயிருந்து பின்ன பிக்கப் ஆன சூப்பர் படம். இயக்குநர் துரையின் படம். தயாரிப்பு எஸ். எஸ். சக்கரவர்த்தி. படத்துல ஹீரோயின் ஜோதிகா, பின்ன ரகுவரன், ஸ்ரீவித்யா, விவேக் போன்ற முன்னனி நடிகர்களும் முக்கியமான கேரக்டரில் நடிச்சுருந்தாங்க.


ஒரு இசையமைப்பாளாராக வேண்டி போராடும் இளைஞர் அவருக்கு உற்ற துனையாக இருக்கும் அன்னன் மற்றும் குடும்பம்….செமையான படம்.

இந்த படத்த என்னால மட்டும் இல்ல…..அந்த 2000 வருஷங்களில் மார்கெட்டிங் துறையில் இருந்த யாராலயும் மறக்கவே முடியாத சினிமா. நான் கல்லூரி படிப்பை முடிச்சுட்டு முதல் முதலில் வேலைக்கு போனது ஒரு மார்கெட்டிங் சம்பந்தப் பட்ட கம்பெனிதான்…..அங்க எனக்கு முதல் பாடமே தலயோட முகவரி படம்தான்.


அந்த படத்துல ஒரு கடற்கரையில் ரொம்ப சோர்வா தலயும் ஜோதிகாவும் உக்காந்துருப்பாங்க…, அப்ப அந்த இடத்துல ஒரு சின்ன பையன் தனக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் மனியை தாவி அடிக்க முயற்சி செய்வான். பல பல முயற்சிகளுக்கு பின்ன தாவி அடிச்சு தல க்கு ஊக்கம் ஊட்டுவது போல இருக்கும். அந்த சீன்தான் எங்களுக்கு மார்கெட்டிங்கில் முக்கிய பாடம்.


தேவாவின் இசையில் அருமையான பாடல்கள் மிகவும் பரபரப்பா ஹிட்டானுச்சு…. நெஞ்சே நெஞ்சே பாடல் எனக்கும் என் அந்த நேர காதலிக்கும் ரொம்ப இஷ்டமான பாடல்….அதை கேக்க கேக்க எங்களுக்குள்ள அன்பு அதிகாயிட்டே இருந்துது……..ம்ம்ம்ம் அது ஒரு கனா காலம். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இது வெறும் படம் மட்டுமல்ல வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பாடம். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். வசனம் எழுத்து சித்தர் பாலகுமாரன்.


தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது வாங்கியது. இந்த படத்துக்காக டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கும் தமிழக அரசின் விருது கிடைத்தது.

அடுத்தப் படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…,ஒரு மீயுசிக்கல் ஹிட், ராஜிவ் மேனனின் செல்லுலாய்டு மூவி. மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், தபு, பூஜா, ஸ்ரீவித்யா போன்ற முன்னனி நடிகர்களின் நடிப்பில் வந்த படம்.


எனக்கு இதுல புடிக்காதது தலயின் ஜோடியா அக்கா மாதிரி இருக்கும் தபு. பின்ன மம்மூக்காவுக்கு பொண்ணு மாதிரி இருக்கும் ஐஸ்வர்யா. இயக்குநருக்கு என்ன டேஸ்டோ.


சங்கர் மகாதேவன் குரலில் .ஆர்.ரகுமான் இசையில் சந்தன தென்றலைவாவ் இப்பவும் கேட்டுக்கிட்டேவும் பாத்துக்கிட்டேவும் இருக்கலாம். மத்த பாட்டுக்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள்தான். சங்கர் மகாதேவனுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த பாடல்.


இதன் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் ரகுமானின் வித்தியாசமான சங்கீத முயற்சிகள். கலைபுலி தானுவின் தயாரிப்பு, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு, சுஜாதாவின் வசனம், ரகுமான் வைரமுத்து எல்லாம் இருந்தும் படம் சுமார்தான். இந்த படத்துல தல மச்சினிச்சியாக ஷாம்லி.

உன்னைக் கொடு என்னை தருவேன்….நீ வருவாய் என படத்தின் நட்பு மூலம் நட்புக்காக பார்த்திபன். சிம்ரன் ஹீரோயினாக, தல மிலிட்டரி ஸ்கூலில் வளர்ந்து நாட்டுக்காக போராடும் இளைஞனாக.


எஸ்.. ராஜ்குமாரின் இசையில் அருமையான பாடல்களான உன்னைகொடு என்னை தருவேன், இதயத்தை கானவில்லை, சாட்டிலைட் ஏறி, சொல்லு தலைவா, இடுப்பு சேலைக்குள்ள எனும் பாடல்கள் நல்ல ஹிட். இதுவும் சுமாரான படம்தான்ஆக மொத்தத்துல…2000ம் வருஷத்துல ஒன்னு சூப்பர் டூப்பர் ஹிட், மத்த ரெண்டும் சுமார்.