Friday, January 18, 2013

எந்த சூலலிலும் கோபம் வேண்டாம்

அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் அப்துல்லாவின் கனவில், ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை....

No comments:

Post a Comment