Tuesday, July 31, 2012

தமிழ்த் திரையுலகில் next சூப்பர் ஸ்டார் ajith

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது அஜீத்குமார் என்பதை அவரைபிடிக்காதவர்களும் ஒப்புக்கொள்ளும் உண்மை.
அஜீத்குமார் நடித்து படம் வருகிறதென்றால் ரசிகர்களுக்கு தீபாவளி என்றே சொல்லலாம்..
தமிழ்த் திரையுலகில் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா அவர்கள் இயக்கிய அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜீத்குமார்.தமிழ் சினிமாவை அப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சினிமா பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிக் கொண்டிருந்த காலம்.
சொல்லப்போனால் கடின முயற்சி எடுத்து கம்பெனி கம்பெனியா நடிக்க வாய்ப்பு கேட்டு கதாநாயகர்களாக நடிக்க வேண்டிய காலம் மாறி வாரிசுகளும் பண முதலாளிகளும் எளிதாக கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்த காலம் அது.
ரஜினிகாந்தும் கமலஹாசனும் மூத்த நடிகர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டபிறகு அடுத்த ரஜினி கமல் யார் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அஜீத் குமார் அறிமுகம ஆகிறார்.
தமிழ் சினிமா செக்கசெவேரென்று இருப்பவர்களை முழுமையான நாயகனாக அங்கீகரித்ததில்லை.வேண்டுமானால் ஓரிருவரை சுட்டிக்காட்டலாம்.
அமராவதிக்குப்பிறகு பாசமலர்கள், பவித்ரா என்று அடுத்தடுத்து படங்கள் நடித்தார்.ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.அதுவரை தமிழ் சினிமாவோ ரசிகர்களோ பெரிதாய் வரவேற்கவில்லை.
1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை அவரை உச்சிக்கே தூக்கிச் சென்றது.அதன் பிறகு தொடர் தோல்வி படங்கள் என்றாலும் எவரது தனிப்பட்ட உதவியுமின்றி தன் உழைப்பை மட்டுமே நம்பி நடித்துக் கொண்டிருந்தவருக்கு ‘காதல் மன்னன்’ என்ற படம் அவரது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத்தது.
முதல்முறையாக அஜீத்தை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா,அதில் அஜீத்தின் மற்றொரு பரிமாணத்தையும் காட்டினார்.
அதுவரை காதல் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த ஆசை நாயகன் அஜீத்தை வாலி படம் வேறு கோணத்திற்கு கொண்டு சென்றது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் அமர்க்களம் என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சரண்.அப்படத்தில் ஆரம்பித்ததுதான் அஜீத்தின் ஸடைல்.. நடை,உடை , பாவணை என அனைத்தை மாற்றினார் சரண்.
‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலைப் போல இன்னுமொரு பாடலுக்கு அப்படி நடிப்பாரா எனத் தெரியவில்லை. பாத்திரமாகவே மாறியிருந்தார். அவரின் ரசிகர் வட்டம் பெரிதானது.
அமர்க்களம் பெற்ற வெற்றிதான் அஜீத்திற்கென்று ஒரு ஸ்டைல் ஒரு பேட்டர்னை உருவாக்கியது.அதுவரையிலும் இயக்குனர்களின் கதைக்கு நடித்துக் கொண்டிருந்த அஜீத்,அப்போதுதான் காணாமற் போனார்.
அஜீத்திற்கென்றே கதை பண்ண ஆயத்தமானார்கள் இயக்குனர்கள்.அப்படி உருவான கதை தான் தீனா.ஆசை நாயகனாக இருந்த அஜீத் அடிதடி நாயகனாக மாறிப்போனார்.ஏற்கனவே ஆசை நாயகனாக அஜீத்தை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ‘தல’ அஜீத் இன்னும் உற்சாகத்தை ஊட்டினார்.
தீனா பெரிய வெற்றியை அடைய அஜீத்தும் தனது அடுத்த கட்டத்தை அடைந்தார்.சாதாரண காதல் கதைகளில் நடிப்பதை தவிர்த்தார் அடுத்த ரஜினிகாந்த் அஜீத் தான் என உறுதியாக ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது.ரசிகர்களை திருப்தி படுத்த வெயிட்டான கதாபாத்திரம் உள்ள கதைகளிலேயே நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி நடித்த படங்கள் சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜனா, அட்டகாசம், பரமசிவன், ஜீ ,திருப்பதி, வரலாறு , ஆழ்வார், கிரீடம் போன்ற படங்கள் அனைத்தும் தோல்வியையே கொடுத்தன. ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்திவிடவில்லை.
பெரிய சறுக்கலில் இருந்த அஜீத் சற்று மனக் குழப்பத்தில் இருக்க நேரடி படம் வேண்டாம் என முடிவெடுத்து ‘பில்லா’ ரீமேக்கில் நடித்து வெற்றி கண்டார். ஆனாலும் அதைத்தொடர்ந்து அவர் நடித்த அசல் ,ஏகன் போன்ற படங்கள் பெரிய தோல்வியைத் தந்தன. பிறகு மங்காத்தா பெரிய வெற்றி என்று சொல்லலாம் .இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் பில்லா 2 எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாமல் தவிக்கிறது.
சரி.. நன்றாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அஜித்குமாரின் படங்கள் ஏன் தொடர் தோல்வியைத் தருகின்றன என்ற கேள்விக்கு பதிலாய் ஒரே மாதியான கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார்..
மூன்றாம் தர ரசிகனுக்கான படம் நடிப்பதில்லை..தனிப்பட்ட ரசிகர்களை மனதில் வைத்து கதைகளை தீர்மானிக்கிறார்.. அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான கதையை தேர்வு செய்யவில்லை..போன்றவை வந்து நிற்கின்றன..
இன்றைய சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் கதையம்சமுள்ள புதிய நடிகர்களின் படங்களையும் பார்க்கிறார்கள். எனவே எந்த நடிகர் நடித்தாலும் கதையம்சம் இருந்தால் தான் படம் ஓடும் என்பதற்கு ரஜினிகாந்தின் சில படங்கள் மற்றும் நான் ஈ படம் ஒரு உதாரணம்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் அஜீத்குமார் ரீமேக் படத்தில் நடித்திருக்ககூடாது.நன்றாக நடிக்கும் ஆற்றலை கொண்ட ஒரு நடிகர் ரீமேக்கில் நடிக்கும் அவசியம் இல்லை என்றே கருதுகின்றனர் மக்கள் .
முதல் காட்சியில் விசிலடிக்கும் ரசிகர்கள் எந்த ஒரு படத்தையும் வெற்றிப் படமாக மாற்ற முடியாது. பொதுமக்கள் பார்த்து ரசித்தாலே ஒரு படம் வெற்றியடைகிறது.அப்படியானால் ஒரு படம் அவர்களுக்கான படமாகத்தான் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட ரசிகர்களுக்கானதாக இருக்ககூடாது.இதுவே அஜீத்தின் தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது.அஜீத்குமார் நடிக்கும் படங்கள் அவருடைய ரசிகர்களுக்கான படமாக இருக்கிறது.சமீபத்திய அவரது படங்களின் விமர்சனங்களைப் பார்த்தால் ‘இது அவரது ரசிகர்களுக்கான படம்’ என்றே இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
சரி அஜீத்குமார் இனி என்ன செய்யவேண்டும்..
1.ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்..
(தாதாயிசம்,ஆண்டி கேரக்டர்,நடை,உடை,பாவணை)
2.படித்த, படிக்காத, நகர, கிராம மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்,புரியும் வண்ணம் கதைகளை தேர்வு செய்யவேண்டும்.
3.வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன் வர வேண்டும்.
4.இயக்குனரை தீர்மானிப்பதைக் காட்டிலும் கதையை தீர்மானிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
5.நல்ல,வித்தியாசமான கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்களிடம் கதையைக் கேட்க வேண்டும்..
6.ஏனைய பிரபல நடிகர்களை போல அல்லாமல் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும்.அஜித்தின் வெற்றி படங்கள் அனைத்துமே புது முக இயக்குனர்களே ..உதாரணம.
(காதல் மன்னன் -சரண்,முகவரி-துரை,வாலி-எஸ்.ஜே சூர்யா,தீனா-ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற அனைத்து படங்களும் அஜீத்தை அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது)
7.அஜீத் படம் மேல்தட்டு மக்களுக்குத்தான் என்ற நிலைப்பாட்டை அவர் மாற்றியமைக்க வேண்டும்.
8.ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
(ரஜினிகாந்த்,கமலஹாசன் போன்றோரின் வளர்ச்சிக்கு அவர்களின் நகைச்சுவை மிகப்பெரிய பங்கு என்பது குறிப்பிடத்தக்கது)
மேற்கண்டவைகள் நடக்குமாயின் அஜீத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

No comments:

Post a Comment