Thursday, March 8, 2012

அஜீத்தை இயக்க 3 இயக்குனர்கள் கடும் போட்டி புதிய பரபரப்பு தகவல்

Recent heavy competition to run 3 new directors, new information, ajith next film, ajith film stills

ரேஸ் இந்தி பட ரீமேக்கில் அஜீத்தை இயக்க 3 இயக்குனர்களிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தியில் சைப் அலிகான் நடித்து ஹிட்டான த்ரில்லர் படம் ரேஸ். இதை தமிழில் அஜீத்தை வைத்து தயாரிக்க மும்பை பட நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
அஜீத் இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் ரேஸ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை விஷ்ணுவர்தனிடம் தரலாமா என அவர் ஆலோசித்து வருகிறார்.
அதே நேரம்,மங்காத்தாÕ மூலம் தனக்கு பெரிய ஹிட் தந்த வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு தரலாமா என்றும் அவர் யோசிக்கிறாராம். சமீபத்தில் டுவிட்டரில்,மீண்டும் அஜீத்துடன் பணியாற்ற விரும்புகிறேன்Õ என நாசுக்காக அவருக்கு தூது விட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜீத்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment