Tuesday, April 30, 2013

தல (அஜீத்) வரலாறு - 9

தல (அஜீத்) வரலாறு - 9






தல (அஜீத்) 1999 ம் ஆண்டு தந்த பேட்டியின் தொடர்ச்சி.....

கேள்வி: இன்று முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் இதற்கென எதையாவது இழந்ததாக நினைத்ததுண்டா?

பதில்:: இல்லை.....நான் எதையும் இழந்ததாக நினைக்கவே இல்லை.., என்னுடைய தனித்தன்மையையோ, தனிமையையோ எதையும் இழக்கவில்லை. நான் எப்போதும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கவே விரும்புகிறேன். எனது சின்ன சின்ன தேவைகளையும்... எனக்கு நானே நிறைவேற்றி கொள்ளவே விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் வரை .....குறைந்தது ஒரு நாளுக்கு 20 சிகரெட் பிடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது, அந்த பழக்கத்தை கைவிடும்வரை நானே கடைக்கு சென்று வாங்கி வரும் வழக்கத்தை கூட நான் இழக்கவில்லை. இது போல... பல சின்ன சின்ன விஷயங்களை கூட நான் இழக்காமல்தான் இருந்து வருகிறேன்.

கேள்வி: உங்களுடைய சினிமா வாழ்க்கையில் முதல் வெற்றியாக எதை நினைக்கிறீர்கள்?

பதில்: சினிமாவில் முதல் வெற்றியாக நான் ரசித்து ருசித்தது ஆசை படத்தின் வெற்றியைத்தான்....அந்த படம்தான் எனக்கு சினிமாவில் நல்ல இடத்தையும் பெற்று கொடுத்தது..அதற்கு காரணமான இயக்குனர் வசந்த் க்கு நான் மிகவும் நன்றி கடன் பெற்றுள்ளேன். ஆரம்பகால என் சினிமா வாழ்க்கையின் குரு இயக்குனர் வசந்தே. இன்றும் அவர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன்..

கேள்வி: அப்போ ஆசை படத்திற்கு கிடைத்த வெற்றி உங்களுக்கு கிடைத்த மிகப் வெற்றி என்று சொல்லலாமா?

பதில்: இல்லை....ஆசை படத்தில் நான் ஒரு நடிகன் மாத்திரமே..., அது முழுக்க முழுக்க இயக்குனர் வசந்தின் வெற்றி, மேலும் அந்த படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கும் அந்த வெற்றியில் பங்கு இருக்கலாம். ஆனால்... என்னை பொருத்தவரை வாலி படம் தான் உண்மையில் நடிகர் அஜீத்துக்கு கிடைத்த வெற்றி..என்று சொல்வேன்.., இதுவரை செய்த படங்களிலும், இனி நடிக்க போகும் படங்களிலும் அஜீத்தின் சிறந்த படம் இது என எதை சொல்கிறார்களோ அதுதான் எனக்கு கிடைக்கும் வெற்றி..இதில் எந்தவித சமரசமும் கிடையாது..

கேள்வி: எந்த முன்னணி நடிகரும் நடிக்க வராத உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற உங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடித்ததற்கு காரணம்?

பதில்: அந்த படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று,,நான் நடிக்க வந்ததிலிருந்து கடந்த 6 வருடங்களில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்ததே இல்லை..நான் நேசிக்கும் வசந்த்,,அகத்தியன் போன்றவர்களும் புதிய இயக்குனர்கள்தான்.. அப்பொழுதுதான் முன்னணி இயக்குனர் விக்ரமனின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..அந்த படத்தில் நான் நடித்த ரோலில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்த போதும் அந்த வாய்ப்பை தவறவிட நான் விரும்பவில்லை, எனவே கண்ணை முடிக்கொண்டு ஓகே .செய்தேன்.

இரண்டு,,நடிகர் கார்த்திக்....அவரின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் நான் இழக்க விரும்பவில்லை..

கேள்வி: விஜய், பிரசாந்த் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது..உங்களை தாழ்வாக நினைத்து கொள்வதுண்டா?

பதில்: இல்லை....கேமரா முன்னாள் நிக்கும் போது எல்லோரையும் என் சக போட்டியாளர்களாக மட்டுமே நினைத்து கொள்வேன்., மேலும் அவர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள்தான்..

கேள்வி: உன்னைத்தேடி எனும் படத்தின் பாடல் காட்சிகளில் புது மாதிரியான ப்ரஷான அஜீத் தெரிஞ்சதுக்கு காரணம்?

பதில்: முதல் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் நடித்த பாடல்காட்சிகள் தான் அவை. படத்தின் டப்பிங்கும் அப்போதுதான் நடைப்பெற்றது..அந்த சமயத்தில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்..அறுவை சிகிச்சைக்கு முன்னரே உன்னைத்தேடி படத்தின் மற்ற காட்சிகள் படமாக்கபட்டுவிட்டன.

இரெண்டாவது அறுவை சிகிச்சைக்கு பின்னர் நடித்த படம்தான் வாலி.., அதற்காக 2 வருட காலம் மிகவும் கஷ்டப்பட்டுதான் நடித்தேன்..

கேள்வி: இப்பொழுது நடித்து கொண்டிருக்கும் படங்கள்?

பதில்: ஆனந்த பூங்காற்றே, பார்த்திபன் சார் கூட நீ வருவாய் என,, சரண் சார் கூட என்னுடைய 25 படமான அமர்க்களம், ராஜீவ் மேனனின் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், லேட்டஸ்டா ஒத்துக்கிட்ட முகவரி போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். இதற்கு பின்னர் நல்ல கதையம்சமுள்ள... வருடத்திற்கு 3 படங்களில் நடித்தால் கூட போதும் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: பத்திரிக்கையாளர்களுக்கும் உங்களுக்குமான உறவு சரியாக இல்லையே ஏன்?

பதில்: எல்லா பத்திரிக்கையாளர்களையும் நான் வெறுப்பதில்லை..குறிப்பாக என்னுடைய உடல்நிலையைப் பற்றியும், என்னுடைய பர்சனல் வாழ்க்கையைப் பற்றியும் மிக மோசமாக சித்தரித்து எழுதுபவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன்.

மேலும்..... ஹீராவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?, கிசுகிசு எழுதுனா ஏன் இவ்வளவு கோபம்?, போன்ற.... சூடான கேள்விகளும் அதற்கு தல கொடுத்த நெத்தியடி பதில்களும் அடுத்த பதிவில்........


No comments:

Post a Comment