இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.
இந்நிலையில், பில்லா-2 படத்தின் ஆடியோ ரிலீஸை இம்மாதம் இறுதியில் நடந்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதேபோல் படத்தையும் அடுத்த மாதம், அதாவது மே மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
பில்லா-2 கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்...!
Thursday, April 12, 2012
பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment