Tuesday, October 22, 2013

தலன்னா யாரு’ என்று கேட்ட கவுதம் , சினிமா உலகில் அஜித்தை இல்லாமல் ஆக்குவேன் ஏ.எம்.ரத்தினம்







ஒரு நடிகர் சொல்றார் அவங்க அப்பாகிட்ட எனக்கு மிகப்பெரிய தயாரிப்பாளர் வேணும்
மிகப்பெரிய இயக்குர் வேணும் அந்த மாதிரியான தயாரிப்பில் தான்  நான் நடிப்பேன் னு சொல்றாநடிகர்....அப்ப தான் என் படம் பெரிய லெவெல்  ல ரீச் ஆகும்னு சொல்லுகிறார் ஒரு  நடிகர் .
அடுத்து ஒரு நடிகர் தன்னை பெரிய லெவெலுக்கு கொண்டு வந்த இயக்குநரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்திருக்கான், என்னவென்றால் அந்த இயக்குரால் சரியா கதை சொல்ல தெரியலயாம் இனிமேலும் இந்த நடிகர் காத்திருக்க முடியாதாம் அதனால் அட்வான்ஸை திருப்பி கொடுத்தாராம் அதே நடிகர் வளரும் கட்டத்தில் இந்த இயக்குருக்காக தவம் கிடந்தார் இப்ப அதே இயக்குநரை தூக்கி எறிகிறார் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்களின் மத்தியில் மனிதாவிமானம் உள்ள மற்றும் தான் வந்த பாதையையும் , நன்றியும் என்றும் மறவாமல் கஷ்டப்படுவார்களுக்கு கை கொடுப்பவர் நம்ம தல அஜித் தான் இவருக்கு பெரிய தயாரிப்பாளரோ , இயக்குரோ தேவை இல்லை அவர் திரையில் வந்தாலே போதும் ரசிக்க மிகப்பெரிய கூட்டமே இருக்கு....


நிகழும், நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் எந்த விளக்கமும் கொடுக்காமல் பொறுமை காத்தால் சொல்லால் சுட்டவர்களை அன்பு கரம் நீட்டி அவர்கள் செய்த பிழையை உண்ர வைக்கலாம் என்பதை மிகவும் சாதூர்யமாக அஜித் அவர்கள் தனது உயிர் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கின்றார். தலயின் 53வது படம் ‘ஆரம்பம்’ என்பது எல்லொரும் அறிந்ததே அதே போல அந்த படத்தின் இயக்குநர் ஏ.எம்.ரத்தினம் என்பதும் எல்லோரும் அறிந்ததே எல்லாவற்றுக்கும் போதியளவு விளம்பரம் செய்யப்பட்டும் 2013.10.30 ஆம் திகதியோ அல்லது 31ஆம் திகதியோ படம் வெளியிடப்படும் என்ற நிலமையும் வந்தாகிவிட்டது. ஏ.எம்.ரத்தினம் சாய் பாபா கோவில் ஒன்றின் அஜிதை சந்தித்து தனது நிலமையை சொல்லி வருந்திய நிலமையிலே அஜித் தனது 53வது படத்தினை தயாரிக்கும் உரிமையினை ஏ.எம்.ரத்தினத்திடம் கொடுத்தார். இப்போது படத்தினை நினைத்த அளவை விட அதிகமாகவே விற்று விட்டார்கள். ஆனால் இன்னும் ரத்தினத்தின் கடன் முடிந்த பாடாக இல்லை. இந்த சந்தர்பத்தின் தான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்தது!


யாரு யாரை சினிமாவை விட்டு அனுப்புவது!!!


“ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்… ‘ஆண்டவா… பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல ஆரம்பத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்று ஜகா வாங்கினாலும் ஆச்சர்யமில்லை. என்ன நடந்தது? ‘வீரம்’ படத்திற்காக ஐதராபாத்திற்கு கிளம்பினாரல்லவா அஜித்? கிளம்புவதற்கு முன்பாக ரத்னத்திற்கு போன் செய்து, ‘நான் உங்க ஆபிசுக்குதான் வந்துகிட்டு இருக்கேன்’ என்றாராம். சார் அப்பப்ப வந்துட்டு போறவர்தானே, இப்ப மட்டும் எதுக்கு இந்த அறிவிப்பு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் ரத்னம். காரை விட்டு அஜீத் ஒருவராக மட்டும் இறங்கவில்லை. அவருடன் கவுதம் மேனனும் இறங்கினாராம். அப்பவே புரிஞ்சு போச்சு ஏ.எம்.ரத்னத்திற்கு. பேச்சு வார்த்தையை நேரடியாக ஆரம்பித்த அஜீத், ‘‘வீரம்’ படம் முடிஞ்சவுடன் உங்க கம்பெனிக்குதான் படம் பண்ணப் போறேன். என்று சாதாரணமாக சொல்லி விட்டார்.

ஆனால் இந்த இடத்தில் தான் அஜித்தின் ரசிகர்களாகிய நாம் ஒன்ரை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். அந்த நிகழ்வு நடந்தது இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த ‘கில்லி’ படத்தின் விழா ஒன்றின் போது அந்த நிகழ்வின் போது இதே ஏ.எம்.ரத்தினம் அன்று சினிமா உலகில் அஜிதை இல்லாமல் ஆக்குவேன் என்று சவால் விட்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை அஜித் அது பற்றி எதுவும் கதைக்கவில்லை. ஆனால் இப்பொது என்ன நடந்திருக்கின்றது. சினிமாவை விட்டு அஜித்தை விரட்டுவேன் என்று சொன்ன அதே வாய் தான் அஜித்திடம் போய் தனது பேனரின் கீழ் படம் நடித்து தன்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டது. இப்போது போதாக்குறைக்கு இன்னும் ஒரு படம் நடித்து கொடுத்து கடனை நானே முடித்து வைக்கின்றேன் என்று அஜித் சொல்ல வாய் பிளந்து போய் நிற்கின்றது! இப்போது ரத்தினத்து தெரிந்திருக்கும் அந்த விழாவின் போது அஜித் பற்றி தான் பேசியது அஜிதையும் அவரையே உயிராக எண்ணி இருந்த ரசிகர்களையும் எப்படி பாதித்திருக்கும் என்று சும்மாவா வள்ளுவன் சொன்னான் ‘கஸ்டம் கொடுப்பவர்களுக்கு நாம் கஸ்டம் கொடுப்பதை விட நல்லதை செய்தால் அது போல் ஒரு வெற்றி இல்லை’ என்று அதையே இன்று அஜித் செய்துள்ளார் போலும்!!!


அன்று சதி பிரித்து வைத்தது இன்று இணைத்தும் வைத்தது!!!

இது மட்டுமா நடந்தது... இன்னும் எவ்வளவோ இருக்கு.. அஜித் ‘வீரம்’ படத்திற்க்கு பிறகு தனது 55வது படத்தினை ஏ.எம்.ரத்தினத்தை தயாரிக்க மறுபடியும் அனுமதித்தார். இந்த படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை. முன்னம் சொன்னது போலவே கவுதம் வாசு தேவமேனன் தான். இவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் உதவி இயக்குநர் ஆக இருந்தவர் ஆகும். அதில் ‘சிமையீ ஆயீ ஆயீ...’ என்று ஒரு பாடல் வரும் அதில் கூட கவுதம் தல காட்டியிருப்பார். அப்போது இருந்தே அஜிதை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது கவுதமுக்கு... இதனை செயற்படுத்த மூன்று சந்தர்பங்கள் கிடைத்தாலும் அவை அனைத்து ஏதோ ஒரு வகையில் நழுவ விடப்பட்டது. முதலாவது ‘காக்க காக்க’ இந்த படம் அஜித்துக்காக அஜித்தை நினைத்து எழுதிய கதை பிறகு சூர்யா நடித்து ஹிட் ஆனது. அடுத்து 'வேட்டையாடு விளையாடு’ இந்த கதையும் அஜித் பக்கம் வந்தே போனது. வந்த இரண்டு கதைகளும் போலீஸ் கதையே! இதை அடுத்து மூன்றாவது சந்தர்ப்பம் முக்கால்வாசி உறுதியாகி பின் கை விடப்பட்டது. அதுதான் ‘அசல்’ படம் இதனை முதலில் இயக்குவதாக இருந்தது கவுத்தமே! ஆனால் இருதரப்பினும் சரியான புரிந்துணர்வு இல்லாத நிலையில் கை விடப்பட்டது. மூன்று படங்களிலும் அஜித்தை வைத்து இயக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தின் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களில் ஒருவன் ‘தலயை வைத்து எப்ப படம் பண்ண போறீங்க” என்று கேட்டார்.

இதற்கு கவுதம் சொன்ன பதில் ‘தலன்னா யாரு’ என்று கேட்டார். இப்படியான ஒரு பதில் சொன்னதுக்காக சமூகவலைத்தளங்களில் கவுதம் பட்ட பாடும். அதன் பின்னர் பகிரங்கமாக அஜித்திடமும், அஜித் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பின் பத்திரிக்கையாளர்கள் அஜித்திடம் ’கவுதம் இப்படி சொல்லியுள்ளார் நீங்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்’ என்று கேட்ட போது அஜித் சொன்ன பதில் ‘அஜித் என்று ஒருவன் இல்லாமல் அவர் 10 படம் பண்ணி விட்டார் அதே போல கவுதம் என்று ஒரு ஆள் இல்லாமல் அஜித் 50 படம் பண்ணி விட்டார்’ என்பதே அஜித்தின் பதில். கவுதம் மன்னிப்பு கேட்டதுக்கு பின்பு இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது! ஆனால் இப்போது என்ன நடந்தது ‘யார் தல’ என்று கேட்ட கவுதம் அடுத்து அடுத்து பிளாப்களை கொடுத்து தனக்கு இருந்த மார்க்கெட்டை முழுமையாக கோட்டை விட்ட பின்னர். கவுத்தமால் பிரபலமாக்கப்பட்ட சூர்யாவிடம் கடைசியாக கதை சொன்னார். ஆனால் சூர்யா வழமைக்கு மாறாக எனக்கு இந்த கதைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். என்று சமாளிப்பாக பதில் சொல்லி விட்டு வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் ஐயும் திருப்ப கொடுத்து விட்டு லிங்குசாமி படத்தில் நடிக்க போய் விட்டார். அந்தோ கதி என்ற நிலமையில் கை விடப்ப்ட்ட கந்தல் துணியின் நிலமைக்கு தள்ளப்பட்டார் கவுதம்!

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தான் அஜித் கவுதமை அழைத்துக்கொண்டு ஏ.எம்.ரத்தினத்தின் ஆபீசுக்கு போய் எனது அடுத்த பட இயக்குநர் இவர்தான் என அறிமுகம் செய்து வைத்தார். இப்போது தன்னை தூற்றியவன் கஸ்டத்தில் இருக்கின்றான் என்ற போது உதவியவருக்குதான் நாங்கள் ரசிகர்களாக இருக்கின்ரோம் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. 55வது படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் பெருமளவு அஜித்திடமும் அஜித் ரசிகர்களாகிய எங்களிடமும் கடமைப்பட்டுள்ளார்கள். மேலும் கவுதம் தெருவித்ததாவது சூர்யாவிடம் சொன்ன கதையோ அல்லது ‘யோகான் அத்தியாயம் ஒன்று’ படத்திற்கான கதையோ இல்லை. இது நான் அஜித்துக்காக நான் புதிதாக எழுதும் கதையே! என்று தெருவித்துள்ளார். சரி ஏதோ கஸ்டத்தில் இருக்கும் இவர்களை தூக்கி நிற்பாட்டி விட்டார் தலைவர்! இன்னும் ஒன்ரை சொல்ல மறந்து விட்டேன்.


யாரையும் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கு வைக்க முடியாது!!!

அது வேறு யாரும் இல்லை நம்ம தமன்னா பற்றித்தான். காத்தியிடம் காதலில் தோல்வி இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உட்பட பலரின் செல்வாக்குடன் தமிழ் சினிமாவின் எல்லைக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நடிகைதான் தமன்னா. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு தமன்னா அளித்த பேட்டியில் ‘என்னை எத்தை பேர் தடுத்தாலும் என்னை தமிழ் சினிமாவிற்க்குள் நுழைய விடாமல் தடுத்தாலும் நான் மீண்டும் வருவேன் தமிழ் சினிமாவுக்கு...’ என்று கண்ணீர் பொங்க கதைத்திருந்தார். இதனை அறிந்த அஜித் உடனடியாக சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தின் கதாநாயகியாக போட்டார். இதன் மூல இனியாரும் எவருக்கும் பயமில்லாமல் தமன்னாவை ஒப்பந்தம் செய்யலாம் என்பதை அஜித் சொல்லாமல் செய்து காட்டியுள்ளார். செய்தவற்றை சொல்லிக்காட்டும் குணம் இல்லாதவர் அஜித். ஆனால் அஜித் வரலாறு படத்தின் ஆரம்பத்தின் சொன்ன ஒரு வசனம் ‘வாழ்ற வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னா பழச அப்ப அப்ப நினைச்சு பார்க்கனும்டா...” அதே தான் தலயின் ரசிகர்களாகிய நாங்களும் சொல்கின்றோம் நாம் எதையும் சொல்லிக்காட்டவில்லை. நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை நினைத்து பார்த்தோம்!!!

No comments:

Post a Comment